கண்டு கொள்ளாத அதிகாரிகள்... கவலையில் பொதுமக்கள்!

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : சின்னபொம்மநாயக்கன்பாளையம் வழியாக பூலுவபட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகம் நஞ்சப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியிலிருந்து பூலுவபட்டி செல்லும் வகையில் சின்னபொம்மநாயக்கன்பாளைம் ரோடு உள்ளது. இது, கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ். நகர் வரை செல்கிறது.ஏறத்தாழ 4
 கண்டு கொள்ளாத அதிகாரிகள்... கவலையில் பொதுமக்கள்!

திருப்பூர் : சின்னபொம்மநாயக்கன்பாளையம் வழியாக பூலுவபட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகம் நஞ்சப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியிலிருந்து பூலுவபட்டி செல்லும் வகையில் சின்னபொம்மநாயக்கன்பாளைம் ரோடு உள்ளது. இது, கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ். நகர் வரை செல்கிறது.

ஏறத்தாழ 4 கி.மீ., துாரத்திலுள்ள இந்த ரோடு செல்லும் பகுதியில், ஆயிரக்கணக்கான வீடுகள், பனியன் நிறுவனங்கள் அமைந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்காததால், குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், தார் ரோடு முற்றிலும் மறைந்து மண் ரோடாக மாறி, புழுதி பறக்கிறது. இதனால், பலரும் அவதிப்படுகின்றனர்.

அப்பகுதியினர் கூறியதாவது:

நாங்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டோம். இந்த ரோட்டை பற்றி யாரும் அக்கறை காட்டவில்லை. இது தார் ரோடா, என்பதை ஆராய்ச்சி செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த ரோட்டில் செல்வதால், டூவீலர் வாகன ஓட்டிகளுக்கு புழுதியை சுவாசித்து, சுவாசக்கோளாறு ஏற்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில், சிறு விபத்துகளும் ஏற்படுவது சகஜமாகி விட்டது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X