பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளை சேர்ந்த கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழுவினருக்கு, குடிநீர் தர பரிசோதனை குறித்த மூன்று நாள் பயிற்சி நேற்று துவங்கியது.
'ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடந்துவரும் இந்த பயிற்சியில், 120க்கும் மேற்பட்ட கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று துவங்கிய பயிற்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார்.
குடிநீர் பரிசோதனை நிபுணர் ஜெபராஜ், பயிற்சி அளித்தார்.