டூ - வீலர்கள் திருடிய வாலிபர் கைது

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி நகரில் வீடுகள், கடைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வது தொடர்கதையாக இருந்தது.இந்நிலையில், இரு நாட்கள் முன், திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் உதவியாளர் சதிஷ் என்பவர் நிறுத்திய இருசக்கர வாகனமும் திருடு போனது.இதையடுத்து, திருத்தணி குற்றப்பிரிவு
 டூ - வீலர்கள் திருடிய வாலிபர் கைது

திருத்தணி:திருத்தணி நகரில் வீடுகள், கடைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வது தொடர்கதையாக இருந்தது.

இந்நிலையில், இரு நாட்கள் முன், திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் உதவியாளர் சதிஷ் என்பவர் நிறுத்திய இருசக்கர வாகனமும் திருடு போனது.

இதையடுத்து, திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று, திருத்தணி போலீசார் சரஸ்வதி நகர் பகுதியில் வாகன சோதனை செய்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின்படி, போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இதில், எம்.எல்.ஏ., உதவியாளரின் இருசக்கர வாகனம் திருடிச் சென்ற நபர் என்றும், திருத்தணி தாலுகா, ஆற்காடுகுப்பம் காலனியைச் சேர்ந்த சத்தியராஜ், 32, என்றும், தெரிய வந்தது.

மேலும், போலீசார் விசாரணையில் சத்தியராஜ், திருத்தணியில் ஐந்து டூ - வீலர்களை திருடியதும் தெரிய வந்தது. பின், போலீசார் ஐந்து வாகனங்களையும் பறிமுதல் செய்து, சத்தியராஜை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X