ஆண்டாள் மகிமை சொல்லும் கார்த்திக் ராஜா இசை ஆல்பம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை :இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள, 'ஸ்ரீ ஆண்டாள்' எனும் ஆடியோ, வரும் 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது.இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில், 'ஸ்ரீ ஆண்டாள்' எனும் தலைப்பில், 12 பக்திப் பாடல்கள் வெளியிடப்பட உள்ளன.இதில் இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, பவதாரணி, எம்பார் கண்ணன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல்களை, ஆண்டாள் வரதராஜன் எழுதியுள்ளார்.ஆண்டாளின்
 ஆண்டாள் மகிமை சொல்லும்  கார்த்திக் ராஜா இசை ஆல்பம்

சென்னை :இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள, 'ஸ்ரீ ஆண்டாள்' எனும் ஆடியோ, வரும் 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில், 'ஸ்ரீ ஆண்டாள்' எனும் தலைப்பில், 12 பக்திப் பாடல்கள் வெளியிடப்பட உள்ளன.இதில் இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, பவதாரணி, எம்பார் கண்ணன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல்களை, ஆண்டாள் வரதராஜன் எழுதியுள்ளார்.

ஆண்டாளின் பிறப்பு, தோழியருடன் பழகுவது, பெரியாழ்வார் வாயிலாக ரங்கநாதரை அறிவது துவங்கி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை அடைவது வரையிலும் ஆறு பாடல்களாக இடம்பெற்றுள்ளன.

ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்துாரில் கோவில் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது, பக்தர்களால் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவது, திருவிழாக்களில் பலவித அலங்காரங்கள், ரதங்களில் ஊர்வலம் செல்வது என, மற்ற பாடல்கள் விரிகின்றன.

பெரியாழ்வார் முதன்முதலாக ஆண்டாளை காணும் போது இடம் பெறும் 'கண்டேன் கண்டேன்' எனும் பாடலை இளையராஜா பாடியுள்ளார்.

'பார் புகழ்' எனும் பாடல், தாயாரின் புகழைப் பாடுகிறது.

தோழியருடன் களித்திருப்பதற்கு, 'கும்மி' பாடல் புனையப்பட்டுள்ளது.

ஆண்டாளின் கனவுப் பாடல், ஓடக்காரனின் பார்வையிலும், 'எண்ணெய் காப்பு உற்சவம்' எனும் பாடல் ஆண்டாளின் மகிமை பாடுவதாகவும் அமைந்துள்ளது. 'பாரிஜாதம்' எனும் பாடல், சூடிக்கொடுக்கும் சுடர்க்கொடி பாடுவதாகவும், கடைசியாக ஸ்தல புராணமும் இடம்பெற்று உள்ளது.இந்த ஆல்பத்தின் ஆடியோ வெளியீடு வரும், 26ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் வெளியிடப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X