குண்டு நெல் விதை கிடைக்காமல் திருத்தணியில் விவசாயிகள் அவதி

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு போன்ற பயிர்கள் விளைவிக்கின்றனர். தற்போது சம்பா பருவத்தில் நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்காக விவசாயிகள் திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று, விதை நெல்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு போன்ற பயிர்கள் விளைவிக்கின்றனர்.

தற்போது சம்பா பருவத்தில் நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக விவசாயிகள் திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று, விதை நெல் வாங்கி வந்தனர்.

இந்நிலையில், மூன்று நாட்களாக குண்டு நெல் விதைகள் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். சில விவசாயிகள் திருத்தணியில் தனியார் விதை நெல் விற்பனை கடைக்கு சென்று 1 கிலோ நெல் விதைக்கு, 16 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து திருத்தணி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் ஒருவர் கூறியதாவது:

சம்பா பருவத்திற்கு, குண்டு நெல், 32 ஆயிரம் கிலோ விதைகள் வந்தன. பெரும்பாலான விவசாயிகள் குண்டு நெல் வாங்கியதால் மூன்று நாட்களுக்கு முன், குண்டு நெல் விதைகள் காலியாகின.

அடுத்த வாரத்தில் கோ- - 51 ரகம் விதை நெல் வரவுள்ளது. தற்போது, குண்டு, கோ- - 51, ஆர்.என்.ஆர்., ஆகிய நெல் ரகங்கள் 1 கிலோ, 37 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு அரசு மானியம், 17.50 ரூபாய் வழங்கப்படுகிறது. மானியம் பணமாக இல்லாமல் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் அதிகளவில் குண்டு நெல் விதை கேட்பதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் குண்டு நெல் கேட்டுள்ளோம்.

அவர்களும் விதை நெல் வழங்குவதாக உறுதி கூறினர். ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு குண்டு நெல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X