ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றுக்கரைகள் சேதம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
பொன்னேரி,:பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே, 13 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கும் பணிகள், 2020ல் துவங்கப்பட்டது.தடுப்பணை, 130 மீட்டர் நீளம், 7 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் சுவர்கள் அமைத்து, அதன் மீது, 10 மீட்டர் அகலம், 1.25 மீட்டர் உயரத்தில், 11 இரும்பு ஷட்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன.தடுப்பணைக்கு முன்னும், பின்னும், 2 கி.மீ., தொலைவிற்கு ஆற்றின் கரைகள்
 ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றுக்கரைகள் சேதம்

பொன்னேரி,:பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே, 13 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கும் பணிகள், 2020ல் துவங்கப்பட்டது.

தடுப்பணை, 130 மீட்டர் நீளம், 7 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் சுவர்கள் அமைத்து, அதன் மீது, 10 மீட்டர் அகலம், 1.25 மீட்டர் உயரத்தில், 11 இரும்பு ஷட்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

தடுப்பணைக்கு முன்னும், பின்னும், 2 கி.மீ., தொலைவிற்கு ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, கரைகள் பலப்படுத்தப்பட்ட பகுதிகளில் மழை நீரால் ஆங்காங்கே அரித்து செல்லப்பட்டு உள்ளன.

கரை அரிப்பு ஏற்பட்டு மண் சரிந்த பகுதிகளில், மணல் மூட்டைகளை அடுக்கி பலப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

தடுப்பணைக்கான கான்கிரீட் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர் மழையால் கரைகள் கரைந்து உள்ளன.

தற்காலிகமாக மணல் மூட்டைகள் போடப்படுகின்றன. மழை நின்றதும், கரை சீரமைப்பு பணிகள் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X