கழிப்பறைகளில் குறைகள் தெரிவிக்க திருத்தணியில் 'க்யூஆர் கோடு' அறிமுகம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, குளியல் அறைகள் மற்றும் ஆண், பெண் கழிப்பறைகள் அடங்கிய ஏழு சமுதாய கழிப்பறையும், ஆண், பெண் என ஆறு கழிப்பறைகள் என மொத்தம் 13 இடங்களில் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு விடப்பட்டு உள்ளது.தற்போது இந்த கழிப்பறைகளை மத்திய அரசின் திட்டமான 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் பராமரித்து
 கழிப்பறைகளில் குறைகள் தெரிவிக்க திருத்தணியில் 'க்யூஆர் கோடு' அறிமுகம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, குளியல் அறைகள் மற்றும் ஆண், பெண் கழிப்பறைகள் அடங்கிய ஏழு சமுதாய கழிப்பறையும், ஆண், பெண் என ஆறு கழிப்பறைகள் என மொத்தம் 13 இடங்களில் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு விடப்பட்டு உள்ளது.

தற்போது இந்த கழிப்பறைகளை மத்திய அரசின் திட்டமான 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் பராமரித்து வரப்படுகிறது.

இந்நிலையில், கழிப்பறைகள் பராமரிப்பு குறித்து பயன்படுத்துபவர்களிடம் தெரிந்துக் கொள்வதற்கு அரசு புதிய திட்டம் செயல்படுத்தியுள்ளது.

அதாவது அந்தந்த கழிப்பறையை கட்டடத்தின் 'க்யூஆர் கோடு' ஒட்டி வைத்து, பயன்படுத்துபவர்கள், அங்குள்ள குறைகள் குறித்து 'க்யூஆர் கோட்டில் ஸ்கேன்' செய்து புகார் தெரிவித்தால் உடனடியாக குறைகள் தீர்க்கப்படும். இந்த வசதி திருத்தணி நகராட்சியில், 13 பொது கழிப்பறைகளில் நடைமுறைப்படுத்தி உள்ளது.

இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் சி.ராமஜெயம் கூறியதாவது:

நகராட்சியில் உள்ள பொது கழிப்பறைகளில் தண்ணீர் வசதி, சுத்தம், மின் விளக்குகள் எரிகிறதா, துப்புரவு பணியாளர் நன்றாக பராமரிக்கிறாரா மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா என அறிவதற்கு தான் 'ஸ்கேன்' செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

புகார்கள் வந்தவுடன் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். இந்த கழிப்பறைகள் விரைவில், மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்க உள்ளது.

இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X