திருத்தணியில் கொட்டி தீர்த்தது மழை

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:வங்கக் கடலில் ஏற்பட்ட தாழ்வழுத்தம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழை, நேற்று பகலிலும் தொடர்ந்து பெய்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர் மற்றும் பணிக்குச் செல்வோர் மழையில் நனைந்தபடியே சென்றனர். இயல்பு வாழ்க்கை பாதித்ததால்,
 திருத்தணியில் கொட்டி தீர்த்தது மழை

திருவள்ளூர்:வங்கக் கடலில் ஏற்பட்ட தாழ்வழுத்தம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

விடிய, விடிய பெய்த மழை, நேற்று பகலிலும் தொடர்ந்து பெய்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர் மற்றும் பணிக்குச் செல்வோர் மழையில் நனைந்தபடியே சென்றனர். இயல்பு வாழ்க்கை பாதித்ததால், மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.


பலத்த மழை



திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் துாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. இந்நிலையில், மாலை 4:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை திருத்தணி நகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் சாலை மற்றும் தெருக்களில் கழிவு நீருடன் மழை நீர் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி மாணவர்கள் மாலை வகுப்புகள் முடித்துக் கொண்டு மழையில் நனைந்தவாறு வீட்டுக்கு நடந்து சென்றனர்.


வெறிச்சோடி இருந்தது



கிராமப்புற மாணவர்கள் பேருந்துகளை பிடிப்பதற்காக கொட்டும் மழையில் நனைந்தப்படி திருத்தணி பேருந்து நிலையத்திற்கு சென்றனர். மேலும் பலத்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்தவாறு சென்றனர்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து வழிப்படுவர். ஆனால், நேற்று தொடர் மழையும், அவ்வப்போது பெய்த பலத்த மழையால் மலைக்கோவிலில் குறைந்த அளவில் பக்தர்கள் நனைந்தப்படியே முருகப் பெருமானை வழிபட்டனர். தேர்வீதி, நேற்று வெறிச்சோடி இருந்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில் 3.5 செ.மீ., சோழவரத்தில் 3.4 செ.மீ., மழை பதிவாகியது.

தாமரைப்பாக்கம் - 2.7; கும்மிடிப்பூண்டி - 1.7; பொன்னேரி - 1.5; செங்குன்றம், பூண்டி - 1.3; ஆவடி - 1.1 செ.மீ., மழை பதிவாகியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X