மூன்று 'சென்ட்' உறுதி பேச்சில் உடன்பாடு

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், லட்சிவாக்கம் ஊராட்சியில் உள்ளது பெரம்பூர் கிராமம்.இங்குள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு தலா, மூன்று சென்ட் இடம் ஒதுக்கி, பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி, லட்சிவாக்கம் காலனியைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.குறிப்பிட்ட அந்த இடத்தை தனியார் யாருக்கும் வழங்கக்கூடாது, அரசு கட்டடங்கள் கட்ட

ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், லட்சிவாக்கம் ஊராட்சியில் உள்ளது பெரம்பூர் கிராமம்.

இங்குள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு தலா, மூன்று சென்ட் இடம் ஒதுக்கி, பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி, லட்சிவாக்கம் காலனியைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

குறிப்பிட்ட அந்த இடத்தை தனியார் யாருக்கும் வழங்கக்கூடாது, அரசு கட்டடங்கள் கட்ட எவ்வித தடையும் இல்லை என, பெரம்பூர் மற்றும் அதை ஒட்டிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், எஸ்.பி., கல்யாண், சப் - -கலெக்டர் மகாபாரதி ஆகியோர் பேச்சு நடத்தினர்.

இதில், லட்சிவாக்கம் காலனியைச் சேர்ந்த இடமில்லாதவர்களுக்கு மூன்று சென்ட் நிலம் வழங்க அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X