கத்திவாக்கம் நுாலகம் கட்ட ஆய்வு

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருவொற்றியூர், எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், 1962ல் கட்டப்பட்ட 60 ஆண்டு பழமையான, கத்திவாக்கம் கிளை நுாலகம் செயல்படுகிறது. இதில் 3,700 பேர் உறுப்பினராக உள்ளனர்.தினமும் 200க்கும் மேற்பட்டோர், நுாலகம் வரும் நிலையில், 10 பேர் அமர்ந்து படிக்க கூட இருக்கைகள் இல்லை. தவிர, கட்டடம் சேதமடைந்து காணப்பட்டது.நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர்,
 கத்திவாக்கம் நுாலகம் கட்ட ஆய்வு

திருவொற்றியூர், எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், 1962ல் கட்டப்பட்ட 60 ஆண்டு பழமையான, கத்திவாக்கம் கிளை நுாலகம் செயல்படுகிறது. இதில் 3,700 பேர் உறுப்பினராக உள்ளனர்.

தினமும் 200க்கும் மேற்பட்டோர், நுாலகம் வரும் நிலையில், 10 பேர் அமர்ந்து படிக்க கூட இருக்கைகள் இல்லை. தவிர, கட்டடம் சேதமடைந்து காணப்பட்டது.

நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடி ரூபாய் ஒதுக்கினார்.

தொடர்ந்து, நுாலகம் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வு பணி நேற்று நடந்தது. பொதுப்பணி துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

எம்.எல்.ஏ., கூறுகையில், ''வைரவிழா கண்ட கத்திவாக்கம் கிளை நுாலகம் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X