இலவச 'நீட்' பயிற்சி 26ம் தேதி முதல் துவக்கம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'நீட்' இலவச பயிற்சி வகுப்பு வரும் 26ம் தேதி துவங்குகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவ., மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 414 பயிற்சி மையங்கள் ஏற்கனவே



திருப்பூர் : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'நீட்' இலவச பயிற்சி வகுப்பு வரும் 26ம் தேதி துவங்குகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவ., மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 414 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஒரு பயிற்சி மையத்திற்கு, 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு, 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

இந்த வகுப்புகள் நேரடி வகுப்புகளாக நடக்கும். திருப்பூரில் குறைந்தது, 13 ஒன்றியங்கள் தவிர, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என, மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X