போதைக்கு அடிமையான தந்தைக்கு அரிவாள் வெட்டு

Added : நவ 23, 2022 | |
Advertisement
பல்லடம் : பல்லடம் அருகே போதைக்கு அடிமையான தந்தையை, மகனே அரிவாளால் வெட்டியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பல்லடம், அண்ணா நகரை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் அந்தோணி, 40. சரக்கு வாகன டிரைவர். மனைவி மதிலைமேரி, 35, மகள் புஷ்பா, 28 மற்றும் மகன் தாமஸ் 17 ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.தாமஸ் கூலி வேலை பார்க்கிறார். அந்தோணிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும்,

பல்லடம் : பல்லடம் அருகே போதைக்கு அடிமையான தந்தையை, மகனே அரிவாளால் வெட்டியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பல்லடம், அண்ணா நகரை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் அந்தோணி, 40. சரக்கு வாகன டிரைவர். மனைவி மதிலைமேரி, 35, மகள் புஷ்பா, 28 மற்றும் மகன் தாமஸ் 17 ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

தாமஸ் கூலி வேலை பார்க்கிறார். அந்தோணிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வருவதால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தாமஸின் சகோதரி புஷ்பா, கர்ப்பமாக இருப்பதால், தாய் வீட்டில் உள்ளார். வழக்கம்போல் நேற்று, குடிபோதையில் வந்த அந்தோணி, மதிலைமேரி, மற்றும் புஷ்பாவை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், தாமஸூக்கும், அந்தோணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த தாமஸ், அந்தோணியின் கழுத்தில் அரிவாளால் வெட்டினார். காயமடைந்த அந்தோணி சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாமஸை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X