யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு; விவசாயிகள் 'மானாவாரி' குற்றச்சாட்டு

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : மானாவாரி பயிர்களுக்கு யூரியா உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் பேசியதாவது:ஊத்துக்குளி, அவிநாசி தாலுகாவில் மானாவாரி சோளம் பயிர்; இறவை மக்காச்சோளம், புகையிலை, வாழை, மஞ்சள்
 யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு; விவசாயிகள் 'மானாவாரி' குற்றச்சாட்டு

திருப்பூர் : மானாவாரி பயிர்களுக்கு யூரியா உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் பேசியதாவது:

ஊத்துக்குளி, அவிநாசி தாலுகாவில் மானாவாரி சோளம் பயிர்; இறவை மக்காச்சோளம், புகையிலை, வாழை, மஞ்சள் பயிர்களுக்கு யூரியா அதிகளவு தேவைப்படுகிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேவைக்கு ஏற்ப உரம் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில், உரம் இருப்பு இல்லை. ஊத்துக்குளி, குன்னத்துார், அவிநாசி, சேவூர், பல்லடம், கரடிவாவி, காமநாயக்கன் பாளையம் பகுதிகளில் உரம் தட்டுப்பாடு நிலவிவருகிறது.இதை சாதகமாக பயன்படுத்தி, தனியார் விற்பனை மையங்களில், டி.ஏ.பி., - காம்ப்ளக்ஸ் உரங்கள் வாங்கினால்தான், யூரியா கிடைக்கும் என விவசாயிகளை நிர்பந்திக்கின்றனர். விவசாயிகள் தலையிட்டு கேட்டபின், அவிநாசி தாலுகா குட்டகம், கூட்டப்பள்ளி கூட்டுறவு சங்கங்களுக்கு தலா, 3 டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டது; ஆனால், இந்த உரம் போதுமானதாக இல்லை.

கூட்டுறவு சங்கங்கள் போதுமான அளவு உரம் தருவித்து, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சேவூர், பல்லடம், அவிநாசி பகுதி உரக்கடைகளில், வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்யவேண்டும்; உரம் இருப்பு உள்ள கடை விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பதிலளித்த சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், 'அதிக உரம் இருப்பு வைத்துள்ள, தேவை குறைந்த கூட்டுறவு சங்கங்களிலிருந்து, தேவை அதிகமுள்ள பகுதிக்கு உரம் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X