அரக்கோணம் - செங்கை வழித்தடத்தில் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:சேந்தமங்கலம் பகுதியில், மின்சார ரயில் மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், ஒரு மணி நேரம் மின்சார ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.அரக்கோணம் - செங்கல்பட்டு மின்சார ரயில் வழித்தடம் உள்ளது. இதில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, 7:00 மணிக்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இது, கூரம் கேட் அருகே,
 அரக்கோணம் - செங்கை வழித்தடத்தில் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

காஞ்சிபுரம்:சேந்தமங்கலம் பகுதியில், மின்சார ரயில் மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், ஒரு மணி நேரம் மின்சார ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

அரக்கோணம் - செங்கல்பட்டு மின்சார ரயில் வழித்தடம் உள்ளது. இதில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, 7:00 மணிக்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இது, கூரம் கேட் அருகே, திடீரென நின்று விட்டது.

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம், வாலாஜாபாத், பாலுார் ஆகிய ரயில் நிலையங்களில் காத்திருந்த ரயில் பயணியர், ரயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சென்னை கடற்கரையில் இருந்து, காலை 5:00 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, பாலுார், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் வந்தடையும், மின்சார ரயிலை, 8:30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்று ஏற்பாடு செய்து, காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

சேந்தமங்கலம் பகுதியில், மின் இணைப்பு சரி செய்யப்பட்ட பின், கூரம் கேட்டில் நிறுத்தப்பட்ட மின்சார ரயிலை, திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, காலை 9:30 மணிக்கு சென்னை கடற்கரை வரையில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என, ரயில் பயணியர் தெரிவித்தனர்.


னவிரைவு ரயிலாக மாற்ற பயணியர் எதிர்ப்பு



இதனால், ரயில் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.


இதனால், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய திருமால்பூர் - சென்னை கடற்கரை ரயில்கள், குறித்த நேரத்திற்கு வரவில்லை.இந்நிலையில், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில், காலை 8:25 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.


இந்த ரயில், திருமால்பூர் விரைவு ரயிலுக்கு பதிலாக, விரைவு ரயிலாக செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ரயில் பயணியர், போராட்டம் நடத்த ரயில் முன் சென்றனர்.இதையறிந்த ரயில் நிலைய மேலாளர் எட்வின் செல்வராஜ், ரயில் பயணியரிடம், குறிப்பிட்ட ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என, உறுதியளித்தார். அதன்பின், 15 நிமிடங்களுக்கு பிறகு, ரயில் புறப்பட்டு சென்றது.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X