செயற்கை நூலிழை வாரியம்; 'யெஸ் இந்தியா கேன்' வலியுறுத்தல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் பாலியஸ்டர் ஆயத்த ஆடை விற்பனையில் சிறந்து விளங்கும், 'வால்ரஸ்' நிறுவனம், பாலியஸ்டர் ஆடை வர்த்தகத்தை உயர்த்தும் நோக்கில், 'யெஸ் இந்தியா கேன்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அமைப்பு சார்பில், எம்.எல்.ஏ.,கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, தனி வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, 'யெஸ் இந்தியா கேன்'
 செயற்கை நூலிழை வாரியம்; 'யெஸ் இந்தியா கேன்' வலியுறுத்தல்

திருப்பூர் : திருப்பூரில் பாலியஸ்டர் ஆயத்த ஆடை விற்பனையில் சிறந்து விளங்கும், 'வால்ரஸ்' நிறுவனம், பாலியஸ்டர் ஆடை வர்த்தகத்தை உயர்த்தும் நோக்கில், 'யெஸ் இந்தியா கேன்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அமைப்பு சார்பில், எம்.எல்.ஏ.,கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, தனி வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, 'யெஸ் இந்தியா கேன்' இயக்குனர் 'வால்ரஸ்' டேவிட் கூறியதாவது:

திருப்பூர், 'வால்ரஸ் யெஸ் இந்தியா கேன்' நிறுவனம், பெண்கள், ஆண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பாலியஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், செயற்கை நுாலிழை ஆயத்த ஆடை வாரியம் அமைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதனால், உலக அளவிலான பாலியஸ்டர் ஏற்றுமதியில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்; வியட்நாம், சீனா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடிக்கவும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும், திருப்பூரை முன்னோடி நகரமாகவும் உயர்த்தவும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X