மக்கள் நலனுக்காக மயானம் அவசியம்! அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
பல்லடம் : பல்லடத்தில் எரியூட்டு மயானம் அமைப்பது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நேற்று நடந்தது.அப்போது அவர் பேசியதாவது:கட்சி பாகுபாடு இன்றி ஒற்றுமையாக செயல்பட்டு மின் மயானம் அமைக்க செயல்படுங்கள். பல்லடத்தில் பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டும் மயானம் அமையவில்லை.நீண்ட முயற்சிக்கு பின் மயானம் அமைக்கும் வாய்ப்பு
 மக்கள் நலனுக்காக மயானம் அவசியம்! அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

பல்லடம் : பல்லடத்தில் எரியூட்டு மயானம் அமைப்பது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது:

கட்சி பாகுபாடு இன்றி ஒற்றுமையாக செயல்பட்டு மின் மயானம் அமைக்க செயல்படுங்கள். பல்லடத்தில் பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டும் மயானம் அமையவில்லை.

நீண்ட முயற்சிக்கு பின் மயானம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் நலன் கருதி மயானம் அமைக்க வேண்டியது அவசியம். இதனால், வட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் பயன்பெறுவர்.

எரியூட்டு மயானத்துக்காக அரசு ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இது மட்டுமன்றி பல்வேறு தொழில் துறையினரும் நிதி உதவி அளித்து பெரிய அளவில் எரியூட்டு மயானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன், ஓடையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நீர் ஆதாரம் பெருகி விவசாயிகளும் பயனடைவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க., - பா.ஜ., - காங்., - மா.கம்யூ., - இ.கம்யூ., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., கொ.ம.தே.க., - த.மு.மு.க., நா.த.க., மற்றும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க.,வினர் மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எரியூட்டு மயான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்படும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X