தெரு நாய்கள் தொல்லை: கருத்தடை பணி துவக்கம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பராமரிப்பாளர் இன்றி, தெருக்களில் வளரும் நாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன.இதனால், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கணக்கெடுத்ததில், 1,350 நாய்களை
 தெரு நாய்கள் தொல்லை: கருத்தடை பணி துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பராமரிப்பாளர் இன்றி, தெருக்களில் வளரும் நாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன.

இதனால், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கணக்கெடுத்ததில், 1,350 நாய்களை கண்டறிந்தனர்.

இந்த நாய்களுக்கு கருத்தடை செய்ய முடிவு செய்தனர்.

அதன் பின், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பாசி தெருவில், தெரு நாய்களை பிடிக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தோர் ஈடுபட்டனர்.

இந்த நாய்களுக்கு கருத்தடை செய்து, மீண்டும் தெருக்களில் விடப்படும் என, சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X