30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு துவக்கம்; 150 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தும், 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தாராபுரம் ரோட்டில் உள்ள ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில் இன்று நடக்கிறது.அறிவியல் மனப்பான்மை, புதுமை சிந்தனை, படைப்பாற்றல், தலைமை பண்பு போன்ற திறன்கள் வளர்ப்பதே இதன் நோக்கம். இதன் கீழ், மூன்று மாதங்கள் ஆய்வு செய்யும் பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்

திருப்பூர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தும், 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தாராபுரம் ரோட்டில் உள்ள ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில் இன்று நடக்கிறது.

அறிவியல் மனப்பான்மை, புதுமை சிந்தனை, படைப்பாற்றல், தலைமை பண்பு போன்ற திறன்கள் வளர்ப்பதே இதன் நோக்கம். இதன் கீழ், மூன்று மாதங்கள் ஆய்வு செய்யும் பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் வழிகாட்டியாக செயல்படுவார்கள்.

பின்னர் மாவட்ட அளவிலான மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் மாணவர்களின் ஆய்வு அறிக்கைகளில் இருந்து சிறந்த ஆய்வு கட்டுரைகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு குழந்தை விஞ்ஞானிகள் என்ற விருது வழங்கப்படும்.

தொடர்ந்து இந்திய அறிவியல் மாநாட்டில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவர். இன்று நடக்கும் மாநாட்டில் திருப்பூரில் உள்ள, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழந்தை விஞ்ஞானிகளாக பங்கேற்கின்றனர்.

'ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்துகொள்வது,' என்ற தலைப்பில் மொத்தம், 150 அறிவியல் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X