வாலிபர் மீது 'குண்டாஸ்'

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 32. கடந்த அக்., 14ம் தேதி சென்னிமலைபாளையத்தில் மைதானத்தில் தனது சகோதரர் ஜெயபிரகாஷ் என்பவருடன் பேசி கொண்டிருந்தார்.அங்கு மது அருந்தி கொண்டிருந்த விக்னேஸ்வரன், 26, சதீஷ்குமார், 19, கனரகராஜ், 20 ஆகியோர், சகோதரர்களிடம் தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்தனர். புகாரின் பேரில், பல்லடம் போலீசார்

திருப்பூர் : திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 32. கடந்த அக்., 14ம் தேதி சென்னிமலைபாளையத்தில் மைதானத்தில் தனது சகோதரர் ஜெயபிரகாஷ் என்பவருடன் பேசி கொண்டிருந்தார்.

அங்கு மது அருந்தி கொண்டிருந்த விக்னேஸ்வரன், 26, சதீஷ்குமார், 19, கனரகராஜ், 20 ஆகியோர், சகோதரர்களிடம் தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்தனர். புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரித்தனர். மூவரையும் கைது செய்தனர்.

இதில், விக்னேஸ்வரன் மீது வழிப்பறி, அடிதடி, கொலை, கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்கு இருப்பது தெரிந்தது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபவதை தடுக்கும் பொருட்டு, விக்னேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., செஷாங் சாய், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், விக்னேஸ்வரன் குண்டாசில் கைது செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X