மாமல்லை நாட்டிய விழா மரகத பூங்காவில் நடத்தப்படுமா?

Added : நவ 23, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களைக் காண, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் பிற மாநிலங்களின் சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.நம் நாட்டின் பாரம்பரிய கலைகளை, சுற்றுலா பயணியர் அறிந்துகொள்ளும் வகையில், தமிழக சுற்றுலாத் துறையும் மத்திய சுற்றுலாத் துறையும் இணைந்து, கடந்த 1992ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில், நாட்டிய விழா

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களைக் காண, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் பிற மாநிலங்களின் சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.

நம் நாட்டின் பாரம்பரிய கலைகளை, சுற்றுலா பயணியர் அறிந்துகொள்ளும் வகையில், தமிழக சுற்றுலாத் துறையும் மத்திய சுற்றுலாத் துறையும் இணைந்து, கடந்த 1992ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில், நாட்டிய விழா நடத்துகிறது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள், சாகச கலைகள் இந்த விழாவில் இடம்பெறும்.

கடந்த 2020 - 21ல், கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக, விழா நிறுத்தப்பட்டது. அதன்பின், 2021 - 22ல் மீண்டும் நடத்தப்பட்டது.

கடந்த 2010 வரை, நாட்டிய பின்னணி சூழல் கருதி, அர்ஜுனன் தபசு சிற்பத்தின் முன், விழா நடத்தப்பட்டது.

ஆனால், 2011ல், கடற்கரை கோவில் பகுதிக்கு மாற்றப்பட்டு, அங்கேயே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், விழா நடக்கும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கடற்கரையில் கடுங்குளிர் நிலவும்.

இதனால், பயணியர் அங்கு சென்று நாட்டிய விழாவை காண தயங்குகின்றனர்.

கடும்பனியுடன் கடற்கரை காற்று வீசும் திறந்தவெளியில், இரண்டு மணி நேரம் நாட்டிய விழா நடப்பதால், பயணியருக்கு சிரமமும், உடல்நலக் குறைபாடும் ஏற்படுகிறது.

நாட்டிய விழா நடத்துவதற்காக, 12 ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறை அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட மரகத பூங்கா, பயனின்றி வீணாக உள்ளது.

எனவே, பயணியர் சிரமத்தை கவனத்தில் கொண்டு, மரகதப் பூங்காவில் நாட்டிய விழாவை நடத்த சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X