திடக்கழிவு மேலாண்மை பணி; 'அபார்ட்மென்ட்'களை பின்பற்றலாமே!

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில், காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது; திடக்கழிவுகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்குவது என, பலப்பல திட்டங்கள் இருந்தாலும், நடைமுறையில் குப்பைகள் மொத்தமாக கொட்டப்படுகின்றன; அவை, பாறைக்குழிகளில் கொட்டப்படுகின்றன.இதேபோல், நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் மட்டுமல்ல, ஊராட்சிகளிலும், சேகரமாகும் குப்பை

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில், காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது; திடக்கழிவுகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்குவது என, பலப்பல திட்டங்கள் இருந்தாலும், நடைமுறையில் குப்பைகள் மொத்தமாக கொட்டப்படுகின்றன; அவை, பாறைக்குழிகளில் கொட்டப்படுகின்றன.

இதேபோல், நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் மட்டுமல்ல, ஊராட்சிகளிலும், சேகரமாகும் குப்பை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கொட்டப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால், குப்பை பிரச்னையால், நகரப்பகுதியுடன் கிராமமும் சுகாதாரமற்ற பகுதியாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, பள்ளிகளில் துவங்கி, மகளிர் குழுக்கள் வரை, அனைவருக்கும், குப்பையை தரம் பிரித்து வழங்குவது; மக்கும் குப்பையை வீடுகள் அளவிலேயே உரமாக்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

திருப்பூர் 'வேர்கள்' அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'அபார்ட்மென்ட்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என, பிரித்து சேகரிக்கப்படும். இல்லாதபட்சத்தில், அபராதம் விதிக்கப்படுகிறது.

இதனால், மக்கும் குப்பையை உரமாக மாற்றலாம். மக்காத குப்பையாக இருந்தாலும், சமுதாயத்துக்கு கேடு விளைவிக்காமல், மறுசுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

வார்டு வாரியாக சுகாதார குழுக்களை உருவாக்கி, அவர்கள் மூலமாக, திடக்கழிவு மேலாண்மை குறித்து தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X