திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதியில், 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 1970ல், பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.இக்கட்டடத்தில், தற்கால தேவைக்கேற்ப வசதிகள் இல்லை. இதனால், ஊழியர்கள் குறுகிய அறைகளில், இட நெருக்கடியில் பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.மன்ற கூட்டம் நடத்த கூட்ட அரங்கமும் இல்லை.
 திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதியில், 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 1970ல், பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.

இக்கட்டடத்தில், தற்கால தேவைக்கேற்ப வசதிகள் இல்லை. இதனால், ஊழியர்கள் குறுகிய அறைகளில், இட நெருக்கடியில் பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மன்ற கூட்டம் நடத்த கூட்ட அரங்கமும் இல்லை. இதனால், கூட்டம் நடத்தும் போது, உறுப்பினர்கள், நெருக்கியடித்து அமர்ந்து அவதிப்படுகின்றனர். அலுவலக சேவைகள் பெற, தினமும் பொதுமக்களும் வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம், தற்போது பலவீனமடைந்துள்ளது. மழை நீர் ஒழுகி, தற்போது மேலும் பாழடைந்துள்ளது. எனவே, அலுவலக தேவை கருதி, பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட, உறுப்பினர்கள் மற்றும் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X