தேசிய தடகள வீராங்கனைக்கு 'பிரித்வி' நிறுவனம் உதவிக்கரம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : 'தினமலர்' செய்தி வெளியானதை தொடர்ந்து, தேசிய தடகள வீராங்கனைக்கு, திருப்பூரை சேர்ந்த பிரித்வி 'இன்னர்வேர்' நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.திருப்பூர், தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர், வைஷாலி. உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறார். மாநில தடகள போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்று, தேசிய தடகளத்தில் களம் பதித்துள்ள
 தேசிய தடகள வீராங்கனைக்கு 'பிரித்வி' நிறுவனம் உதவிக்கரம்



திருப்பூர் : 'தினமலர்' செய்தி வெளியானதை தொடர்ந்து, தேசிய தடகள வீராங்கனைக்கு, திருப்பூரை சேர்ந்த பிரித்வி 'இன்னர்வேர்' நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

திருப்பூர், தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர், வைஷாலி. உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறார். மாநில தடகள போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்று, தேசிய தடகளத்தில் களம் பதித்துள்ள வைஷாலி, சமீபத்தில் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடந்த தேசிய தடகளத்தில் தொடர் ஓட்டத்தில் முதலிடம் வென்று தங்கம், 100 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடம் வென்று அசத்தினார்.

இவரின் சாதனை குறித்து, 'தினமலர்' திருப்பூர் பக்கத்தில், 19ம் தேதி செய்தி வெளியானது. இதையறிந்த பிரித்வி இன்னர்வேர் நிறுவன உரிமையாளர்கள் பாலன் - பூங்கொடி இருவரும், மாணவி வைஷாலிக்கு, ஊக்க நிதியாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.

வைஷாலி கூறுகையில், ''எனது வெற்றியை அங்கீகரித்து, அடுத்தடுத்த போட்டிகளுக்கு செல்ல ஊக்கப்படுத்தும் வகையில், 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய பிரித்வி இன்னர்வேர் நிறுவனத்துக்கு நன்றி. எங்களை போன்ற விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும், 'தினமலர்' நாளிதழுக்கும் மனமார்ந்த நன்றி,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X