கண்டு கொள்ளாத அதிகாரிகள்... கவலையில் பொதுமக்கள்! நீரோடையை மூட நிரந்தர திட்டம்?

Added : நவ 23, 2022 | |
Advertisement
பல்லடம் : பல்லடம் அருகே, நீர் வழித்தட ஓடையை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர்- - தொட்டியப்புச்சி கோவில் செல்லும் வழித்தடத்தில், நீரோடை உள்ளது. மங்கலம் ரோடு, அறிவொளி நகர் வழியாக செல்லும் இந்த ஓடை ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் ஆதாரமாக
 கண்டு கொள்ளாத அதிகாரிகள்... கவலையில் பொதுமக்கள்! நீரோடையை மூட நிரந்தர திட்டம்?

பல்லடம் : பல்லடம் அருகே, நீர் வழித்தட ஓடையை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர்- - தொட்டியப்புச்சி கோவில் செல்லும் வழித்தடத்தில், நீரோடை உள்ளது. மங்கலம் ரோடு, அறிவொளி நகர் வழியாக செல்லும் இந்த ஓடை ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

இதனால், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயிகளும் பயன்பெறுவர். சமீப காலமாக இந்த ஓடை மூடுவிழா காணப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன், ஓடைவழித்தடத்தில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.

மழைநீர் செல்வதற்கு குழாய்கள் முறையாக பதிக்கப்படாமல் பணிகள் நிறைவடைந்தன. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தற்போது, தரைமட்ட பாலத்தின் இரு பக்கமும், கட்டடக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு, ஓடை மூடப்பட்டது.

அருகே, ஓடை வழித்தடத்தில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கட்டுமான பணியும் ஜரூராக நடந்து வருகிறது. இவ்வாறு, நீரோடைக்கு நிரந்தரமாக மூடு விழா செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து, பொதுப்பணி துறை, வருவாய் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் என, யாரும் கண்டுகொள்வதில்லை.

எதிர்வரும் நாட்களில், ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தின் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, ஓடையை மீட்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X