இரண்யசித்தி மயான பாதை வருவாய் துறையினர் ஆய்வு

Added : நவ 23, 2022 | |
Advertisement
செய்யூர்:செய்யூர் அருகே இரண்யசித்தி கிராமத்தில், மலைக்காலனி பகுதியில், 20 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இந்த கிராமத்தின் மயானத்திற்கு செல்ல, இரண்டு வழிகள் உள்ளன. இரண்யசித்தி கிராமத்தின் வழியாக ஒன்று, புதுப்பட்டு கிராமத்தின் வழியாக மற்றொன்று.இரண்யசித்தி கிராமத்தின் வழியாக செல்லும் பாதை துாரமாக உள்ளதால், சில ஆண்டுகளாக, புதுப்பட்டு கிராமத்தின் வழியாக உடலை எடுத்து
 இரண்யசித்தி மயான பாதை வருவாய் துறையினர் ஆய்வு

செய்யூர்:செய்யூர் அருகே இரண்யசித்தி கிராமத்தில், மலைக்காலனி பகுதியில், 20 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தின் மயானத்திற்கு செல்ல, இரண்டு வழிகள் உள்ளன. இரண்யசித்தி கிராமத்தின் வழியாக ஒன்று, புதுப்பட்டு கிராமத்தின் வழியாக மற்றொன்று.

இரண்யசித்தி கிராமத்தின் வழியாக செல்லும் பாதை துாரமாக உள்ளதால், சில ஆண்டுகளாக, புதுப்பட்டு கிராமத்தின் வழியாக உடலை எடுத்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி, இரண்யசித்தி கிராமத்தில், நடேசன், 86, என்பவர், உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.

புதுப்பட்டு கிராமத்தின் வழியாக, அவரது உடலை எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தபோது, உடலை எங்கள் கிராமத்தின் வழியாக எடுத்து செல்லக்கூடாது என, புதுப்பட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின், சம்பவஇடத்திற்கு வந்த செய்யூர் தாசில்தார் பெருமாள் மற்றும் செய்யூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர், புதுப்பட்டு கிராம மக்களிடம், இந்த முறை புதுப்பட்டு கிராமத்தின் வழியாக சடலம் செல்ல அனுமதிக்குமாறு பேச்சு நடத்தினர்.

புதுப்பட்டு கிராம மக்கள் ஒப்புக்கொள்ளாததால், இரண்யசித்தி கிராமத்தின் வழியாக செல்லும் பாதையில் எடுத்து செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பாதை தொலைவாக உள்ளதால், மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், விரைவில் மாற்றுப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த் துறையினர் உறுதியளித்தனர்.

அதையடுத்து, நேற்று மயானத்திற்கு பாதை அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் செய்யூர் வட்டாட்சியர் பெருமாள் ஆகியோர், இரண்யசித்தி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X