தரையில் கிடந்த கோப்புகள் பார்த்த கலெக்டர் அதிர்ச்சி

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : கோவை கலெக்டர் சமீரன், அரசு துறை அலுவலகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது வழக்கம். கோவை தெற்கு ஆர்.டி.ஓ., (கோட்டாட்சியர்) அலுவலகத்துக்கு நேற்று சென்ற அவர், தண்ணீர் தொட்டியை திறந்து, சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, தண்ணீர் இருப்பு இருக்கிறதா என பார்த்தார்.மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு சென்ற அவர், போதுமான வசதிகள் இருக்கிறதா, மாற்றுத்திறனாளி அலுவலரிடம்

கோவை : கோவை கலெக்டர் சமீரன், அரசு துறை அலுவலகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது வழக்கம். கோவை தெற்கு ஆர்.டி.ஓ., (கோட்டாட்சியர்) அலுவலகத்துக்கு நேற்று சென்ற அவர், தண்ணீர் தொட்டியை திறந்து, சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, தண்ணீர் இருப்பு இருக்கிறதா என பார்த்தார்.

மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு சென்ற அவர், போதுமான வசதிகள் இருக்கிறதா, மாற்றுத்திறனாளி அலுவலரிடம் கேட்டறிந்தார். சுவற்றில் இருந்த தீயணைப்பான் கருவியை பார்த்த கலெக்டர், இதை கையாளத்தெரியுமா என, அலுவலர்களிடம் கேட்டார். பின், தீயணைப்பு துறையினரை வரவழைத்து, தீ விபத்து ஏற்பட்டால், எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தீயணைப்பான் கருவியை எப்படி உபயோகிப்பது என பயிற்சியளிக்க அறிவுறுத்தினார்.

பதிவேடுகள் அறைக்கு சென்ற அவர், கோப்புகள் தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மழைக்காலத்தில் தரை ஈரப்பதமாக இருக்கும் என்பதால், கோப்புகள் சேதமடைய வாய்ப்பிருக்கிறது. அதனால், கோப்புகளை ரேக்குகளில் அடுக்கி, பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தினார். அப்போது, உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியா, தெற்கு ஆர்.டி.ஓ., பண்டாரிநாதன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X