டெங்கு தடுப்பு பணியில் 800 பணியாளர்கள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : மாநகராட்சி, 4வது வார்டு சிவசக்தி நகர், பி அண்ட் டி காலனியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று 'அபேட்' மருந்து தொட்டிகளில் ஊற்றினர்.இப்பணிகளை பார்வையிட்ட, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், அப்பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, துடியலுார் சந்தை அருகே பயன்பாட்டில் இல்லாத

கோவை : மாநகராட்சி, 4வது வார்டு சிவசக்தி நகர், பி அண்ட் டி காலனியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று 'அபேட்' மருந்து தொட்டிகளில் ஊற்றினர்.

இப்பணிகளை பார்வையிட்ட, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், அப்பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, துடியலுார் சந்தை அருகே பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்ட கமிஷனர், தேவையான இயந்திரங்கள் வாங்கி, உடனடி பயன்பாட்டுக்கு கொண்டுவர பொறியாளர்களை அறிவுறுத்தினார்.

இது குறித்து கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் தலா 6 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, பருவமழை என்பதால் வார்டுக்கு இருவர் வீதம், 200 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு குழுவினர் மண்டலத்துக்கு, 15 பேர் உட்பட மொத்தம், 800 பேர் டெங்கு காய்ச்சல், அறிகுறிகள் கண்டறியும் பணிகளில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X