ரங்கே கவுடர் வீதியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : மத்திய மண்டலம், 80வது வார்டுக்கு உட்பட்ட ரங்கே கவுடர் வீதியில் நேற்று, விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டடத்தை, மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர்.இது குறித்து, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு கூறியதாவது: ரங்கே கவுடர் வீதியில் பிரகாஷ் குமாரி என்பவர், ஒரு வருடத்துக்கு முன்பு வீடு கட்டுவதற்கு
 ரங்கே கவுடர் வீதியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'

கோவை : மத்திய மண்டலம், 80வது வார்டுக்கு உட்பட்ட ரங்கே கவுடர் வீதியில் நேற்று, விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டடத்தை, மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர்.

இது குறித்து, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு கூறியதாவது: ரங்கே கவுடர் வீதியில் பிரகாஷ் குமாரி என்பவர், ஒரு வருடத்துக்கு முன்பு வீடு கட்டுவதற்கு அங்கீகாரம் பெற்று, கடைகள் கட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் ஆய்வு செய்தபோது விதிமீறல் கண்டறியப்பட்டு, அங்கீகாரம் இல்லாத கட்டடம் என நோட்டீஸ் அளித்தோம். ஆனாலும் அவர் தொடர்ந்து கட்டிக்கொண்டே இருந்தார். 9 மாதங்களுக்கு முன், இரு முறை நோட்டீஸ் வழங்கினோம். இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலரிடம் மேல்முறையீடு செய்தார்.

அவரும் கால அவகாசம் அளித்து மூன்று மாதங்களாகிவிட்டது. அதன்பிறகும், வரைபடம் தயாரித்து சமர்ப்பிக்காமலும், விதிமீறிய கட்டட பகுதியை இடிக்காமலும் இருந்ததால், தரைதளம், முதல் மற்றும் இரண்டாம் தளம் வரை என, 11 ஆயிரத்து, 662 சதுரடியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பூட்டி 'சீல்' வைத்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X