கலெக்டர்களின் வாக்குறுதி காத்தோட போயாச்சு! விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்தோர் அதிர்ச்சி

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : 'கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு, மாற்று இடம் வழங்க வாய்ப்பில்லை' என, மாவட்ட நிர்வாகம் கைவிரித்திருப்பதால், நிலத்தை இழந்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி, ஓராண்டாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை, 351 ஏக்கர் பட்டா நிலத்துக்கு

கோவை : 'கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு, மாற்று இடம் வழங்க வாய்ப்பில்லை' என, மாவட்ட நிர்வாகம் கைவிரித்திருப்பதால், நிலத்தை இழந்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி, ஓராண்டாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை, 351 ஏக்கர் பட்டா நிலத்துக்கு இழப்பீடு வழங்கி, கையகப்படுத்தப்பட்டு உள்ளது; இன்னும், 110 ஏக்கர் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.

எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி காந்தி நகரை சேர்ந்த நில உரிமையாளர்கள், தங்களுக்கு இழப்பீடு வழங்கியதோடு, ஏற்கனவே உறுதியளித்தபடி, அரசூரில் மாற்று இடம் வழங்க கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக, சட்டசபை மனுக்கள் குழுவுக்கு அவர்கள் அனுப்பிய கோரிக்கையை, கலெக்டர் சமீரன் நிராகரித்து, பதில் அனுப்பியுள்ளார். இது, அப்பகுதியினருக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது.


கைவிரிப்பு



அக்கடிதத்தில் கலெக்டர் கூறியிருப்பதாவது:

கையகப்படுத்திய நிலத்துக்கு சதுரடிக்கு ரூ.1,500 வீதம், எவ்வித வரி பிடித்தமின்றி, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கும், மரங்களுக்கும் நிர்ணயித்த மதிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாற்று இடம் தொடர்பாக, மாவட்ட மதிப்பீட்டு கூட்டத்தில் எவ்வித பரிந்துரையும் அளிக்கப்படவில்லை. நில உரிமையாளர்களுக்கு வழங்கிய நில மதிப்பு சதுரடிக்கு ரூ.1,500 என்பது, அப்பகுதி சந்தை மதிப்பில், 250 சதவீதம்.

வீடுகளுடன் கூடிய மனைகளை கையகப்படுத்த, மாற்று இடம் வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமான உத்தரவாதம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசால் அளிக்கப்படவில்லை. மாற்று இடம் வழங்க விதிகளிலும் இடமில்லை.

இவ்வாறு, கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.

அதனால், நிலத்தை இழந்து பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ள குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் மனு கொடுத்தனர்.

அவர்கள் கூறியதாவது:

விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி, 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகி, வீடுகளை இழந்து இடம் பெயரும் வீட்டு உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையுடன், வீட்டு மனை தரப்படும் என, முந்தைய கலெக்டர்கள் உமாநாத் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் உறுதி அளித்திருந்தனர். இப்போது, இழப்பீடு மட்டுமே வழங்கியிருக்கின்றனர்.


அதிர்ச்சி அளிக்கிறது



2018, ஏப்., 27ல் 4, 5, 6 ஆகிய பிளாக்குகளில் வசித்த எங்களுக்கு வீட்டு மனை தரப்படும் என கலெக்டர் அளித்த உறுதிமொழி காரணமாகவே, ஒப்புதல் கடிதம் வழங்கினோம்.

இந்நிலையில், அக்., 17ல் கலெக்டர் சமீரன் சார்பில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'மாற்று இடம் வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை; வீட்டுமனை வழங்க வாய்ப்பில்லை' என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தியதால், பாதிக்கப்பட்டோரை மீண்டும் அழைத்து பேச்சு நடத்தி, நியாயமான கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X