ஒரே நாளில் இரு பயிற்சி; எங்கே தான் செல்வது? திணறுகின்றனர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : குறு வள மைய பயிற்சி நடக்கவுள்ள வரும் 26ம் தேதியன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்துதல் செய்ய, சிறப்பு முகாம், கடந்த 12,13 தேதிகளில் நடத்தப்பட்டது.

கோவை : குறு வள மைய பயிற்சி நடக்கவுள்ள வரும் 26ம் தேதியன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்துதல் செய்ய, சிறப்பு முகாம், கடந்த 12,13 தேதிகளில் நடத்தப்பட்டது. வரும் 26, 27ம் தேதிகள் வரை, இப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வாக்குசாவடி மையமாக செயல்படும் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கல்வித்துறை சார்பில் வரும் 26ம் தேதி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சியும், நான்கு, ஐந்தாம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கான பயிற்சியும் நடக்கிறது.

ஒரேநாளில் இரு நிகழ்வுகள் நடப்பதால், எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் இருந்தும், தற்போது வரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்,' தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பணிப்புரிவதா அல்லது கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றுவதா என தெரியவில்லை. கல்வித்துறை வழங்கும் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு, வாக்குச்சாவடி மைய பணியில் இருந்து விலக்கு அளிக்கலாம். இல்லாவிடில் தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது,'' இயக்குனரகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த அறிவிப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுக்கு, இயக்குனரகத்தில் இருந்து மாற்று அறிவிப்பு வந்ததும், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X