பெற்றோர் உள்ளிட்ட நால்வரை கொலை செய்த இளைஞர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
புதுடில்லி, புதுடில்லியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர், பெற்றோர் உள்ளிட்ட தன் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை குத்தி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுடில்லியில், ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள், இங்கு ஒரு இளைஞர் தன் குடும்பத்தினர் நால்வரை குத்தி கொலை
 பெற்றோர் உள்ளிட்ட நால்வரை கொலை செய்த இளைஞர் கைது



புதுடில்லி, புதுடில்லியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர், பெற்றோர் உள்ளிட்ட தன் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை குத்தி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடில்லியில், ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள், இங்கு ஒரு இளைஞர் தன் குடும்பத்தினர் நால்வரை குத்தி கொலை செய்துள்ளது, பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடில்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்த கேசவ், 25, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிஅளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசார் கேசவ் வீட்டை திறந்து பார்த்த போது, அங்கு நான்கு பேர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

கடந்த தீபாவளி முதல் கேசவ் வேலையின்றி இருந்துள்ளார். இதனால் போதைப் பழக்கத்திற்கு, அடிமையாகி உள்ளார்.

இதையடுத்து, அவரது பெற்றோர் அவரை மறு வாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். சம்பவத்தன்று இரவு போதை பொருளுக்காக பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்.

அவரது பெற்றோர் பணம் தர மறுத்ததையடுத்து, கத்தியால் பெற்றோரையும், சகோதரி மற்றும் பாட்டியையும் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலமுறை குத்தி கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து கேசவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X