சேதமடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஏனாத்துாரில் இருந்து காஞ்சிபுரம் சாலை 5.60 கி.மீ., நீளமுடையது.சென்னையில் இருந்து, சுங்குவார்சத்திரம் வழியாக, காஞ்சிபுரம் வரும் வாகனங்கள், பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம் வழியாக சுற்றிக் கொண்டு காஞ்சி நகருக்குள் செல்வதை தவிர்க்கும் வகையில், ஏனாத்துார் புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.பொதுமக்கள்
 சேதமடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஏனாத்துாரில் இருந்து காஞ்சிபுரம் சாலை 5.60 கி.மீ., நீளமுடையது.

சென்னையில் இருந்து, சுங்குவார்சத்திரம் வழியாக, காஞ்சிபுரம் வரும் வாகனங்கள், பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம் வழியாக சுற்றிக் கொண்டு காஞ்சி நகருக்குள் செல்வதை தவிர்க்கும் வகையில், ஏனாத்துார் புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையின் அகலம் மிகவும் குறைவாக உள்ளதால், இந்த சாலையில் எதிரெதிரே இரு கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால், வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-22ன் கீழ், 3.90 கோடி ரூபாய் மதிப்பில், 5.5 மீட்டர் அகலம் கொண்ட சாலையை, 7.00 மீட்டர் அகலத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இப்பணி நிறைவு பெற்று மூன்று மாதங்கள்கூட முழுமை பெறாத நிலையில், கோனேரிகுப்பத்தில், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு கூடம் எதிரில் உள்ள சிறுபாலம் அருகில், சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்தள்ளது.

சாலை வளைவான அப்பகுதியில், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்களால் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, சிறுபாலம் அருகில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X