கிடப்பில் முருகப்பா சாலை மழை நீர் கால்வாய் பணி

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 44வது வார்டில் முருகப்பா சாலையோரம் மழை நீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் முறையாக சீரமைக்க வேண்டும் என, பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது.புதிதாக கால்வாய் கட்டாவிட்டாலும் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பணி செய்யாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.இந்த கால்வாய் ஜெம் நகர் இரட்டை
 கிடப்பில் முருகப்பா சாலை மழை நீர் கால்வாய் பணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 44வது வார்டில் முருகப்பா சாலையோரம் மழை நீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் முறையாக சீரமைக்க வேண்டும் என, பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதிதாக கால்வாய் கட்டாவிட்டாலும் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பணி செய்யாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.

இந்த கால்வாய் ஜெம் நகர் இரட்டை கால்வாயில் இருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர்., நகர் பகுதி வழியாக, ஆசிரியர் பகுதியில் இரட்டை கால்வாயுடன் இணைகிறது.

அங்கிருந்து தேனம்பாக்கம் ஏரியில் அந்த தண்ணீர் கலக்கிறது. இம்மாதம் 15ம் தேதி மாநகராட்சியில் நடந்த அவசர கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

அவரவர் வார்டுகளில் நடக்கும் பணிகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, 44வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் முருகப்பா சாலை மழை நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, மன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இப்படி இருந்தால் எதிர்கட்சியினர் வார்டுகளில் எப்படி பணி நடக்கும் என பொது மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X