காஞ்சியில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பதிவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை 7:00 மணியில் இருந்தே லேசான மழை பெய்ய துவங்கியது.காலை 9:00 மணியை கடந்தும் மழை பெய்து கொண்டிருந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் என, மாணவ- - மாணவியர், பெற்றோரும் 'டிவி' முன் காத்திருந்தனர்.இருப்பினும், எந்தவித
 காஞ்சியில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பதிவு

காஞ்சிபுரம்:வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை 7:00 மணியில் இருந்தே லேசான மழை பெய்ய துவங்கியது.

காலை 9:00 மணியை கடந்தும் மழை பெய்து கொண்டிருந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் என, மாணவ- - மாணவியர், பெற்றோரும் 'டிவி' முன் காத்திருந்தனர்.

இருப்பினும், எந்தவித அறிவிப்பும் வெளியாகாதததால், அவசர அவசரமாக புறப்பட்டு, மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும், பள்ளிக்கு தாமதமாக சென்றனர்.

காஞ்சிபுரத்தில், நேற்று காலையில் இருந்தே மழை பெய்ததால், மாணவர்கள் மட்டுமின்றி, நடைபாதை வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமலும், வெளியில் நடமாடியோரும் அவதியடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர்மழை காரணமாக, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில், 7 செ.மீ., மழையும், உத்திமேரூரில் 0.6 செ.மீ.,; வாலாஜாபாத்தில் 0.3 செ.மீ., ஸ்ரீபெரும்புதுாரில் 0.2 செ.மீ., மழை பதிவாகியது.

காஞ்சிபுரத்தில் நாள் முழுதும் மழை பெய்ததால், நகரின் முக்கிய சாலைகளான விளக்கடி கோவில் தெரு, கீரை மண்டபம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியது.

மழை நீரில் ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, 28 கால்நடைகள் இறந்துள்ளதாகவும், 53 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X