போலி கல்விச்சான்று தந்து பணி இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'

Added : நவ 24, 2022 | |
Advertisement
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலி கல்வி சான்று கொடுத்து இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தவர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்தனர். தற்போது தஞ்சாவூரில் பணியாற்றும் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மருதம் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் நெப்போலியன், 52. சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் டிப்ளமோ லேப் டெக்னீசியன் கோர்ஸ் முடித்ததாக கூறி அதற்கான கல்வி

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலி கல்வி சான்று கொடுத்து இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தவர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்தனர். தற்போது தஞ்சாவூரில் பணியாற்றும் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மருதம் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் நெப்போலியன், 52. சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் டிப்ளமோ லேப் டெக்னீசியன் கோர்ஸ் முடித்ததாக கூறி அதற்கான கல்வி சான்றுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 2017 மே 15ல் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார்.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் அப்போது அவரது கல்வி சான்றின் உண்மை தன்மையை அறிய மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பவில்லை.

அவர் இங்கு 2019 வரை இ.சி.ஜி., பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். அதற்கு பிறகும் சான்றிதழை ஆராயாமல் பணி தொடர 'புரபேஷன்' தகுதி வழங்கியுள்ளனர்.

பின், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றம் பெற்று சென்றார்.

இந்நிலையில், சமீபத்திய ஆய்வில் சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகம், அவரின் கல்வி சான்று போலி என உறுதி அளித்தது.

இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனை இளநிலை உதவியாளர் சுரேஷ்குமார், சிவகங்கை போலீசில் புகார் அளித்தார்.

நெப்போலியன் மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த நபர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X