தொண்டாமுத்தூர் : பேரூர் தாலுகா தேர்தல் பிரிவு மற்றும் தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பேரணி, தொண்டாமுத்தூரில் நேற்று நடந்தது.
பேரூர் தாசில்தார் இந்துமதி துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பேரூர் தாலுக்கா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் நேரு மற்றும் தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தேவராஜ் ஆகியோர், பரிசு வழங்கினர்.