கே.பி.ஆர். கல்லுாரியில் கல்வி தொழில்நுட்ப ஆய்வு மையம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கோவை : மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களில், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க, கோவை கே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்ப கல்லூரியில், எல் அண்ட் டி எஜூடெக் சார்பில், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர் தொழில்நுட்ப ஆய்வு மையம் துவங்கப்பட்டது. கே.பி.ஆர்., குழுமத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எல் அண்ட் டி இன்ஜினியரிங்
 கே.பி.ஆர். கல்லுாரியில் கல்வி  தொழில்நுட்ப ஆய்வு மையம்



கோவை : மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களில், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க, கோவை கே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்ப கல்லூரியில், எல் அண்ட் டி எஜூடெக் சார்பில், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர் தொழில்நுட்ப ஆய்வு மையம் துவங்கப்பட்டது. கே.பி.ஆர்., குழுமத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எல் அண்ட் டி இன்ஜினியரிங் உற்பத்தி துணைத் தலைவர் பால்குன் சோஷி பேசுகையில், "இது போன்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி தொழில்நுட்ப மையங்கள் நாட்டுக்கு பயனளிப்பதாக இருக்கும். அருங்காட்சியக வசதியை பயன்படுத்தி, மாணவர்கள் தனிச்சிறப்பு பெற வேண்டும்," என்றார்.

விழாவில், விஸ்வேஸ்வரய்யா இண்டஸ்ட்ரியல் தொழில் காட்சியகத்தின் இயக்குனர் சாதனா அட்டாவர், நாஸ்காம் துணை இயக்குனர் உதய சங்கர், கல்லுாரி முதல்வர் அகிலா பங்கேற்றனர்.

இந்த மையத்தை, இலவசமாக பார்வையிட விரும்பும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் kpriet.ac.in/experience-engineering என்ற இணையதள முகவரியிலோ அல்லது 88702 83186 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X