'சுகாதாரமான சூழலில் சத்துணவு சமைக்கணும்'

Added : நவ 24, 2022 | |
Advertisement
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், உணவு திருவிழா, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மகேஸ்வரி, சத்துணவு பணியாளர்கள் உருவாக்கியிருந்த, காய்கறி மற்றும் உணவு கண்காட்சியை பார்வையிட்டார்.அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு, அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்க
 'சுகாதாரமான சூழலில் சத்துணவு சமைக்கணும்'



தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், உணவு திருவிழா, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மகேஸ்வரி, சத்துணவு பணியாளர்கள் உருவாக்கியிருந்த, காய்கறி மற்றும் உணவு கண்காட்சியை பார்வையிட்டார்.

அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு, அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், உணவு சமைக்கும்போது சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் சமைக்க வேண்டும். மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறை என்ற நிலை இருக்க கூடாது. கடைசி மாணவர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் தங்கள் பணியை சேவையாக கருதி பணியாற்ற வேண்டும்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X