மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 வயது மகளின் கழுத்தை நெரித்துக்கொலை செய்த தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி; இவரது மனைவி ஆறுமுகக்கனி, 45; இவர்களது மகன் முப்பிடாதி, 23; மகள் அருணா, 19.பேச்சியும், மகனும் சென்னையில் லாரி டிரைவர்களாக உள்ளனர். மகள் அருணா
 மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 வயது மகளின் கழுத்தை நெரித்துக்கொலை செய்த தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி; இவரது மனைவி ஆறுமுகக்கனி, 45; இவர்களது மகன் முப்பிடாதி, 23; மகள் அருணா, 19.

பேச்சியும், மகனும் சென்னையில் லாரி டிரைவர்களாக உள்ளனர். மகள் அருணா கோவையில் தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்தார்.

அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். நேற்று அவரது வீட்டுக்கு பெண் பார்க்க வருவதாக இருந்தனர். இதற்காக அருணா விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் அருணா, தன் தாயிடம், வேறு ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

இதனால் தாய் - மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமற்ற தாய் ஆறுமுகக்கனி, மகள் அருணாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின், விடிய விடிய மகள் உடலுடன் இருந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டில் இருந்த ஹேர் டை, கண்ணாடி துண்டுகள், துாக்க மாத்திரைகளை 'மிக்சி'யில் அரைத்து குடித்தார். கத்தியால் இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

அருகில் வசிப்போர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணையில் மகளை கொலை செய்ததை தாய் ஒப்புக்கொண்டார்; அவர் கைது செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X