அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்துக்கு ஹெச்.டி., பாக்ஸ்கள் கொள்முதல் அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் முடிவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:துல்லியமான காட்சிகளை வெளிப்படுத்தும், 'ஹெச்.டி., செட்டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்வதற்கான முதற்கட்ட நவடிக்கையை, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் துவக்கி உள்ளது.குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்க, 2007ல் துவக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், 70 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தனர். டிஜிட்டலுக்கு மாறினாலும் சரியான நிர்வாகம் இல்லாததால், வாடிக்கையாளர்கள்

சென்னை:துல்லியமான காட்சிகளை வெளிப்படுத்தும், 'ஹெச்.டி., செட்டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்வதற்கான முதற்கட்ட நவடிக்கையை, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் துவக்கி உள்ளது.

குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்க, 2007ல் துவக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், 70 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தனர். டிஜிட்டலுக்கு மாறினாலும் சரியான நிர்வாகம் இல்லாததால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 36 லட்சமாக குறைந்தது.

தற்போது, வாடிக்கையாளர் எண்ணிக்கை 21 லட்சமாக சரிந்து விட்டது. இதற்கு, ஹெச்.டி., பாக்ஸ்கள் வழங்காதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துல்லியமாக காட்சிகளை வெளிப்படுத்தும் வகையில், புதிய ஹெச்.டி., பாக்ஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகளில், அரசு கேபிள் டிவி நிறுவனம் இறங்கி உள்ளது.

இதுகுறித்து, அரசு கேபிள், டிவி ஆப்பரேட்டர்கள்கூறியதாவது:

சிக்னல் கோளாறு; செட்டாப் பாக்சில் ஏற்படும் பழுது; ஹெச்.டி., பாக்ஸ் இல்லாதது போன்ற காரணங்களால், அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

நான்கு நாட்களாக சிக்னல் கோளாறு காரணமாக, அரசு கேபிள் டிவி தெரியவில்லை. இதனால், ஏராளமான வாடிக்கையாளர்கள் டி.டி.ஹெச்.,சுக்கு மாறிவிட்டனர்.

இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஹெச்.டி., பாக்ஸ் கொள்முதல் செய்யவும், அரசு கேபிள் டிவி நிறுவனம் முன் வந்துள்ளது.

இதன்படி, ஹெச்.டி., பாக்ஸ் வழங்கக் கோரி, அரசு கேபிள் டிவியின் இணையதளத்தில், ஆப்பரேட்டர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்பரேட்டர்களின் தேவையை கருத்தில் வைத்து, அதற்கேற்பஹெச்.டி., பாக்ஸ்களை வழங்க நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்டணம் தள்ளுபடி?


'சிக்னல்' கோளாறு காரணமாக, அரசு கேபிள் 'டிவி' நான்கு நாட்கள் தெரியவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் கட்டணம் தரமாட்டோம் என கூறி வருகின்றனர். எனவே, சிக்னல் பாதிப்பு இருந்த நாட்களுக்கான கட்டணத்தை, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் தள்ளுபடி செய்ய வேண்டும் என, 'ஆப்பரேட்டர்'கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X