'எங்க ஏரியாவுக்கு குடிநீர் வந்து 10 நாளாச்சு': மக்கள் குமுறலுக்கு 'செயலி' வாயிலாக தீர்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
கோவை : மாநகராட்சியின், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'குடிநீர் வினியோக கண்காணிப்பு செயலி' வாயிலாக ஊழியர்களின் தில்லு முல்லு கண்டறியப்பட்டு தீர்வு காணப்படுகிறது.கோவை மாநகராட்சியின் பழைய, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்கென, வீடுகளுக்கு இணைப்பு வழங்குவது, தரைமட்ட, மேல்நிலை தேக்க

கோவை : மாநகராட்சியின், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'குடிநீர் வினியோக கண்காணிப்பு செயலி' வாயிலாக ஊழியர்களின் தில்லு முல்லு கண்டறியப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

கோவை மாநகராட்சியின் பழைய, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்கென, வீடுகளுக்கு இணைப்பு வழங்குவது, தரைமட்ட, மேல்நிலை தேக்க தொட்டிகள் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

தெலுங்குபாளையம் ஜெயராம் நகர் உள்ளிட்ட இடங்களில், இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, பொது மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கும் வகையில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

வீடுகளில் குடிநீர் மானி அளவீடு என்பது, தனி செயலி வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளது. தொழில் நுட்பங்களில் இதுவும் ஒன்று. இதற்கென, ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'சிறந்த புவியியல் தகவல் பயன்பாட்டு செயலி' விருதை, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா உள்ளிட்டோர் பெற்றுவந்தனர்.

குடிநீர் வினியோக கண்காணிப்பு செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், குடிநீர் திறப்பாளர்கள் விரும்பிய பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்வது போன்ற தில்லு முல்லு வேலைகள் தடுக்கப்படுவதுடன், குடிநீர் கிடைக்காத ஆவேசத்தில் மக்கள் போராட்டங்களில் இறங்குவதும் தவிர்க்கப்படும் என்கின்றனர், மாநகராட்சி அதிகாரிகள்.

'புகாரே இனி வராது'

24 மணி நேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:மாநகராட்சியின் பழைய, 60 வார்டுகள், 718 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 36 தொட்டிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள குடிநீர் வினியோக கண்காணிப்பு செயலி வாயிலாக, தண்ணீர் வால்வு திறக்கப்படும் இடம், வினியோகிக்கப்படும் இடம் உள்ளிட்ட விபரங்களும், கம்ப்யூட்டரில் கண்காணிக்கப்படுகிறது.முன், தண்ணீர் வந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. குடிநீர் திறந்துவிடும் 'வாட்டர் மேன்' தாம் விரும்பிய இடங்களுக்கு தண்ணீர் விடுகின்றனர்; சில பகுதிகளுக்கு விடுவதில்லை' என்ற புகார்கள் வரும். இனி இதுபோன்ற புகார்கள் தவிர்க்கப்படும். பணியாளர்கள் தவறு கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X