கோவை : கோவையில், அடுத்த ஆண்டு மார்ச்சில் சர்வதேச பூனைகள் கண்காட்சி நடக்கவுள்ளது.
கோவையில் 'கேட்டரி கிளப்' சார்பில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சர்வதேச பூனை கண்காட்சி நடுவர் யோகான் லாம்பிரிசிட் கூறியதாவது:
தமிழகத்தில் கோவையில்தான், பூனைகள் கிளப் முதல் முதலாக துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு இரண்டு முறை, பூனைகள் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சில், இங்கு சர்வதேச பூனைகள் கண்காட்சி நடத்தப்படும். பூனை வளர்ப்பவர்களை ஒருங்கிணைத்து, பூனை வளர்ப்பு குறித்து வகுப்புகள் நடத்தி, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
நோய் தொற்று இல்லாமல், ஆரோக்கியமான பூனைகளை வளர்க்க அவர்களுக்கு வழிகாட்டப்படும். பூனை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், போட்டிகள் நடத்தப்படும். நாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவது போல், கேட்டரி கிளப் சார்பில் பூனைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கண்காட்சி நடுவர்கள் தீயா, சுதாகர் கடிகினேனி, கேரோல் ஆன், கோவை கேட்டரி கிளப் தலைவர் பிரதாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.