மேம்பாலத்தில் பழுது வாகன ஓட்டிகள் அவதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
பெங்களூரு,-கே.ஆர்.நகர் மார்க்கெட் மேம்பால சாலையில், ஒரு இடத்தில் நட், போல்டுகள் மேலே எழுந்துள்ளதால், வாகன பயணியர் பாதிப்படைந்துள்ளனர்.பெங்களூரின் இதய பகுதியில், கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து மைசூரு சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தும், பாலகங்காதரநாத சுவாமி மேம்பாலத்தில், நட், போல்டுகள் கழன்று மேலே பெயர்ந்து வந்துள்ளன.போல்டு குத்தி வாகனங்கள் பஞ்சர் ஆகின்றன. சில வாகனங்கள்



பெங்களூரு,-கே.ஆர்.நகர் மார்க்கெட் மேம்பால சாலையில், ஒரு இடத்தில் நட், போல்டுகள் மேலே எழுந்துள்ளதால், வாகன பயணியர் பாதிப்படைந்துள்ளனர்.

பெங்களூரின் இதய பகுதியில், கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து மைசூரு சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தும், பாலகங்காதரநாத சுவாமி மேம்பாலத்தில், நட், போல்டுகள் கழன்று மேலே பெயர்ந்து வந்துள்ளன.போல்டு குத்தி வாகனங்கள் பஞ்சர் ஆகின்றன. சில வாகனங்கள் பல்டியடித்தன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகன பயணியர் பரிதவிக்கின்றனர்.

இதுபற்றி பெங்களூரு மாநகராட்சியிடம், போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்தும் பயனில்லை. மாநகராட்சி அதிகாரிகள் மேம்பாலத்தை சரியாக நிர்வகிக்காததே, பிரச்னைக்கு காரணம். மேம்பாலத்தில் வேகமாக வரும் வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தால், என்ன செய்வது என, வாகன பயணியர் கேள்வி எழுப்புகின்றனர்.

நட்டுகள், போல்டுகள் பெயர்ந்துள்ள இடங்களில், போக்குவரத்து போலீசார் தடுப்பு வைத்துள்ளனர். வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X