ஆங்கிலேயரை திணறடித்த கோவை ரயிலை கவிழ்த்து சேர்த்தனர் பெருமை

Added : நவ 24, 2022 | |
Advertisement
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, நம் நாட்டில் மட்டுமின்றி, அந்தமான் சிறையில் ஆங்கிலேயரால் சித்திரவதைக்கு ஆளானவர்கள் ஏராளம். இப்படி சிறைக்கு சென்றவர்களில் சிங்காநல்லுார், வெள்ளலுார், சூலுார் என கோவையை சேர்ந்தவர்கள் பலர்.காரணம், 1942ம் ஆண்டு கொச்சியில் இருந்து, சூலுார் நோக்கி வெடிமருந்து எடுத்துக்கொண்டு வந்த புகைவண்டியினை, சிங்காநல்லுார் அருகே கவிழ்த்து,

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, நம் நாட்டில் மட்டுமின்றி, அந்தமான் சிறையில் ஆங்கிலேயரால் சித்திரவதைக்கு ஆளானவர்கள் ஏராளம். இப்படி சிறைக்கு சென்றவர்களில் சிங்காநல்லுார், வெள்ளலுார், சூலுார் என கோவையை சேர்ந்தவர்கள் பலர்.

காரணம், 1942ம் ஆண்டு கொச்சியில் இருந்து, சூலுார் நோக்கி வெடிமருந்து எடுத்துக்கொண்டு வந்த புகைவண்டியினை, சிங்காநல்லுார் அருகே கவிழ்த்து, ஆங்கிலேயர்களின் வலிமையை நிலைகுலைய செய்த தியாகிகள் ஏராளம்.

இவர்கள் தான், அந்தமான் உள்ளிட்ட சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆங்கிலேயரின் சித்ரவதைக்கு ஆளானார்கள். தமது உயிரையும் பொருட்படுத்தாமல், இந்த ரயில் கவிழ்ப்பில் ஈடுபட்டதால் விரல் நக கண்களில் ஊசி குத்துவது, கை, கால்கள் உடைக்கப்பட்டு ஊனமாக சிறையில் இருந்து வெளிவந்தார்கள்.

இப்படிப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, சுதந்திரத்துக்கு பிறகு ஓய்வூதியத்தை(மதிப்பூதியம்) மத்திய அரசு வழங்கியது. அவர்கள் ரத்தம் சிந்தியதை கவுரவிக்கும் விதமாக, 'தாமிரப்பத்திரம்' விருதை வழங்கியது.

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரின் கொட்டத்தை அடக்க, ரயில் கவிழ்ப்பு சம்பவம் அரங்கேறிய இடங்களில், கோவையும் ஒன்று என்பதில் அனைவரும், குறிப்பாக தியாகிகளின் வாரிசுகள் இன்றும் பெருமை கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X