மோசடியை அம்பலப்படுத்தியவர் மீது புகார் அதிகாரியின் நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட மோசடி குறித்து 'வீடியோ' பதிவிட்ட இளைஞர் மீது, சேத்துப்பட்டு பி.டி.ஓ., ரேணுகோபால், போலீசில் புகார் அளித்துள்ளார். இது, மக்களை மிரட்டும் நடவடிக்கை என குற்றச்சாட்டு எழுந்தள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராம பஞ்., தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜேஸ்வரி, 42, உள்ளார்.இவரது மாமனார் ஏழுமலை,

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட மோசடி குறித்து 'வீடியோ' பதிவிட்ட இளைஞர் மீது, சேத்துப்பட்டு பி.டி.ஓ., ரேணுகோபால், போலீசில் புகார் அளித்துள்ளார். இது, மக்களை மிரட்டும் நடவடிக்கை என குற்றச்சாட்டு எழுந்தள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராம பஞ்., தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜேஸ்வரி, 42, உள்ளார்.

இவரது மாமனார் ஏழுமலை, 65; இவர் ஏற்கனவே இரு முறை பஞ்., தலைவராக இருந்தவர். தற்போது, திருவண்ணாமலை, அ.தி.மு.க., வடக்கு மாவட்ட ஒன்றிய துணை செயலராக உள்ளார்.


விசாரணை


இவரே, ஆக்டிங் பஞ்., தலைவர் போல் இயங்குகிறார்.

இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டில், மத்திய அரசின், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், குடிநீர் இணைப்பு வழங்க, 3.69 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில், மோசடி நடந்து உள்ளது.

இந்த மோசடியை அப்பகுதியை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்ற இளைஞர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இதையடுத்து சேத்துப்பட்டு பி.டி.ஓ., ரேணுகோபால், தலைமையிலான அதிகாரிகள், இந்திரவனம் கிராமத்தில் முகாமிட்டு புதிய பைப் லைன் அமைத்து, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேத்துப்பட்டு பி.டி.ஓ., ரேணுகோபால், வீடியோ பதிவிட்ட இளைஞர் முரளி கிருஷ்ணன் மீது, சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

அதில், 'இந்திரவனத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் முரளி கிருஷ்ணன், 28, இப்பணியை செய்ய முடியாதவாறு, தவறான நோக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடும் எதிர்ப்பு


இதற்கு, பொதுமக்களும், பல அமைப்பினரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் பாஸ்கர், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலர் சிவபாபு, மத்திய அரசின் வழக்கறிஞரும், ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு, பா.ஜ., மாநில துணைத்தலைவருமான சங்கர் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X