'கூகுள் பே, போன் பே' வழியாக டிக்கெட் பயணியர் வசதிக்காக பி.எம்.டி.சி., அறிமுகம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
பெங்களூரு-கையில் பணம் இல்லை என்றாலும், 'கூகுள் பே, போன் பே' வழியாக பணம் செலுத்தி, பி.எம்.டி.சி., பஸ்களில் பயணிக்கும் வசதி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.பெங்களூரில் கொரோனா அதிகமாக இருந்த போது, பணம் இல்லா டிக்கெட் நடைமுறையை, பி.எம்.டி.சி., கொண்டு வந்தது. நடத்துனர்களுக்கு 'கியூஆர் கோட்' அளிக்கப்பட்டது. ஆனால், வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறால், 2021 அக்டோபரில், இந்த நடைமுறை
 'கூகுள் பே, போன் பே' வழியாக டிக்கெட் பயணியர் வசதிக்காக பி.எம்.டி.சி., அறிமுகம்



பெங்களூரு-கையில் பணம் இல்லை என்றாலும், 'கூகுள் பே, போன் பே' வழியாக பணம் செலுத்தி, பி.எம்.டி.சி., பஸ்களில் பயணிக்கும் வசதி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பெங்களூரில் கொரோனா அதிகமாக இருந்த போது, பணம் இல்லா டிக்கெட் நடைமுறையை, பி.எம்.டி.சி., கொண்டு வந்தது. நடத்துனர்களுக்கு 'கியூஆர் கோட்' அளிக்கப்பட்டது.

ஆனால், வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறால், 2021 அக்டோபரில், இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.

அதன்பின் பி.எம்.டி.சி., மொபைல் செயலியை துவங்கி, தின பாஸ், மாத பாஸ்கள் மட்டும் வழங்கியது. தற்போது டிக்கெட் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

பி.எம்.டி.சி.,யின் பெரும்பாலான நடத்துனர்களுக்கு, 'ஆன்ட்ராய்டு' வசதி கொண்ட மின்னணு டிக்கெட் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பயணியர் 'கூகுள் பே, போன் பே' வழியாக பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். நடத்துனர்களின் சில்லரை பிரச்னைகளுக்கும், தீர்வு கிடைத்துள்ளது.

பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கனவே சோதனை முறையில், ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட, 1,500 டிக்கெட் இயந்திரங்கள் நடத்துனர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10க்குள் அனைத்து பஸ்களின் நடத்துனர்களுக்கும், இயந்திரங்கள் வழங்கப்படும்.

ஸ்மார்ட் மொபைல் போன்றுள்ள டிக்கெட் இயந்திரத்தில் பட்டனுக்கு பதில், 'டச் ஸ்க்ரீன்' இருக்கும். டிக்கெட் கொடுப்பது மட்டுமின்றி, 'வைபை' தொடர்பு, கியு கார்டை காண்பிக்கும் வசதி உள்ளது.

பயணியர் ஏறும், இறங்கும் பஸ் நிலையத்தை பதிவு செய்தால், கட்டணத்தை காண்பிக்கும். ரொக்கமாகவே அல்லது டிஜிட்டல் முறையிலோ பணம் செலுத்திய பின், டிக்கெட் வரும்.

இவ்வாறு அவர் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X