மின்சாரம் தாக்கி ஐ.டி.ஐ., மாணவர் பலி உறவினர்கள் 6 மணி நேரம் மறியல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
பண்ருட்டி, நவ. 24-பண்ருட்டி அருகே, மின் கம்பி அறுந்து விழுந்து பலியான மாணவரின் உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அரசு, 17; பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் எலக்ட்ரீஷியன் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்த
 மின்சாரம் தாக்கி ஐ.டி.ஐ., மாணவர் பலி உறவினர்கள் 6 மணி நேரம் மறியல்



பண்ருட்டி, நவ. 24-

பண்ருட்டி அருகே, மின் கம்பி அறுந்து விழுந்து பலியான மாணவரின் உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அரசு, 17; பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் எலக்ட்ரீஷியன் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த ஐ.டி.ஐ.,யில் பணிபுரியும் ஆசிரியர் பிரபாகரன், மாணவர்கள் அரசு, 17; ஆதி, 16, ஆகிய இருவரையும் ஒறையூர் பகுதியில் உள்ள தன் மாமனார் வீட்டிற்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார்.

மாமனார் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய்களை பறிக்குமாறு மாணவர்களிடம் பிரபாகரன் கூறியுள்ளார். தேங்காய் பறித்தபோது மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி மாணவர் அரசு இறந்தார்.

இதுதொடர்பாக, ஆசிரியர் பிரபாகரன் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், மாணவரின் உறவினர்கள், பண்ருட்டி படைவீட்டம்மன் தேரடி மும்முனையில் நேற்று காலை 8:30 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இறந்த மாணவர் அரசுவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்; குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம், பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா பேச்சு நடத்தினார்; இழுபறி நீடித்தது.

பின் ஒருவழியாக, பகல் 2:30 மணிக்கு மாணவர் அரசுவின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் பண்ருட்டி - புதுப்பேட்டை சாலையில் ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X