திப்பு புத்தகம் விற்பனைக்கு தடை பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
பெங்களூரு-'திப்புசுல்தான் கனவுகள்' என்ற புத்தகத்தை விற்பனை செய்ய பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.பிரபல நாடக இயக்குனரும், எழுத்தாளருமான அட்டான்டா கார்யப்பா, 'திப்பு நிஜ கனசுகளு' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இத்துடன் திப்பு சுல்தான் சம்பந்தமான நாடகங்களையும் நடத்துகிறார்.இந்நிலையில், 'அட்டான்டா கார்யாப்பா எழுதிய 'திப்பு நிஜ கனசுகளு' புத்தகம் மதம்,
 திப்பு புத்தகம் விற்பனைக்கு தடை பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு



பெங்களூரு-'திப்புசுல்தான் கனவுகள்' என்ற புத்தகத்தை விற்பனை செய்ய பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல நாடக இயக்குனரும், எழுத்தாளருமான அட்டான்டா கார்யப்பா, 'திப்பு நிஜ கனசுகளு' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இத்துடன் திப்பு சுல்தான் சம்பந்தமான நாடகங்களையும் நடத்துகிறார்.

இந்நிலையில், 'அட்டான்டா கார்யாப்பா எழுதிய 'திப்பு நிஜ கனசுகளு' புத்தகம் மதம், மதநல்லிணக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்ததும் வகையில் உள்ளது. இதில் பொய் தகவல்கள் நிரம்பி உள்ளது. எழுத்தாளர் தான் கூறிய கருத்துக்கு எந்த ஆவணங்களையும் காட்டவில்லை.

'இந்த புத்தகம் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என பெங்களூரு மாவட்ட வக்பு வாரிய முன்னாள் தலைவர் ரபிஉல்லா, பெங்களூரு 15வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜெ.ஆர். மன்டோத்சா முன்னிலையில் நடந்தது. நீதிபதி கூறுகையில், “திப்பு நிஜ கனசுகளு புத்தகத்தை பதிப்பகத்தினர் எங்கும் வினியோகம் செய்ய கூடாது. விற்பனையும் செய்ய கூடாது,” என, கூறி தடை விதித்தார். அதே நேரம், ''அட்டான்டா கார்யப்பா திப்பு சம்பந்தமான நாடகம் நடத்த தடையில்லை,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X