ஹெப்பால் மேம்பாலத்தில் தடை குறைந்தது போக்குவரத்து நெரிசல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
பெங்களூரு-ஹெப்பால் மேம்பாலத்தில், காலையில் 'பீக் ஹவரில்' சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில், வாகன நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளது.பெங்களூரின், ஹெப்பால் மேம்பாலத்தில், வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி அதிகம். காலையில் அலுவலக பணிக்கு, பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பொது மக்கள் அவதிப்பட்டனர்.



பெங்களூரு-ஹெப்பால் மேம்பாலத்தில், காலையில் 'பீக் ஹவரில்' சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில், வாகன நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளது.

பெங்களூரின், ஹெப்பால் மேம்பாலத்தில், வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி அதிகம். காலையில் அலுவலக பணிக்கு, பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பொது மக்கள் அவதிப்பட்டனர். இதற்கு தீர்வு காணும் வகையில், ஹெப்பால் மேம்பாலத்தில், காலை 8:30 மணி முதல், 10:30 மணி வரை, சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து, நவம்பர் 18ல் போக்குவரத்து பிரிவு சிறப்பு கமிஷனர் சலீம் உத்தரவிட்டார்.

தடை உத்தரவுக்கு பின், இந்த மேம்பாலத்தில் ஓரளவு போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. போக்குவரத்து சுமுகமாக உள்ளது.

இது குறித்து, போக்குவரத்து பிரிவு சிறப்பு கமிஷனர் எம்.ஏ.சலீம் கூறுகையில், ''ஹெப்பால் மேம்பாலத்தில், ஒரு மாதம் வரை சோதனை முறையில், காலையில் இரண்டு மணி நேரம், சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பலன் கிடைத்துள்ளது. வாகனங்களின் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X