செக் போஸ்ட்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கலைந்தது கனவு!கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய ரெண்டு மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிக்கும் புல்லுக்கட்டு கட்சியின் வேட்பாளர் யார், யார் என்பதை முடிவு செய்தாகி விட்டதாம். இதில் பொன்னான தொகுதிக்கும்் யாரென்பதை உறுதி செய்தாகி விட்டது.அந்த நபரிடம், டிசம்பர் 7ல் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்திருப்பதாக 'மாஜி' முதல்வர் கோலாரில் தெரிவித்து விட்டார்.இதனால் வேட்பாளர்



கலைந்தது கனவு!

கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய ரெண்டு மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிக்கும் புல்லுக்கட்டு கட்சியின் வேட்பாளர் யார், யார் என்பதை முடிவு செய்தாகி விட்டதாம். இதில் பொன்னான தொகுதிக்கும்் யாரென்பதை உறுதி செய்தாகி விட்டது.

அந்த நபரிடம், டிசம்பர் 7ல் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்திருப்பதாக 'மாஜி' முதல்வர் கோலாரில் தெரிவித்து விட்டார்.இதனால் வேட்பாளர் யார் என்ற சிக்கலுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதனால்,நான் தான் வேட்பாளர் என சொல்லி திரிந்த வக்கீல், டாக்டர், தொழிலதிபர் என நான்கைந்து பேரின் ஆசை கனவு கலைந்திருக்கு.

பூ கட்சியில் நீயா? நானா?

அசெம்பிளி தேர்தலில்பூ கட்சியில் வேட்பாளர் யார், எவர் என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதனால் ஆளாளுக்குநான் தான்னு சொல்றாங்க. 'மாஜி' அசெம்பிளிகாரர் மகனுக்கு தான் 'சீட்' என்பது ஒரு தரப்பினரின் நம்பிக்கை.

செங்கோட்டை 'முனி'யின் நம்பிக்கைக்குரியவர் என உள்ளூரின் விவேக் நகர் காரரும், கிராம பஞ்சாயத்து தலைவர் ஒருத்தரும், அறக்கட்டளை தலைவர் என இன்னொருத்தரும் 'சீட்' கிடைத்திடும் என்று தேர்தலுக்கான வேலைகளை செய்து வராங்க. இதில் அறக்கட்டளை தலைவர் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

இவர்களின் ஆட்டம் ஓட்டம் எல்லாம், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் வரை மர்ம கதையாக நீடிக்கும். கட்சி சீட் கிடைக்காமல் நழுவினால் சுயேச்சையாக போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாம்.

பயன் தருமா போராட்டம்?

கோல்டு மைன்ஸ் தொழிலாளர் பிரச்னையை 18 தொழிற்சங்கங்கள் மறந்துட்டாங்க. ஓரிரு அரசியல் கட்சிக்காரர்கள் மட்டுமே குரலெழுப்பி வர்றாங்க. மற்ற கட்சிகள் அக்கறை காட்ட என்னவாயினர்; எங்கே போனார்கள்.

மைன்சை மூடு என்று சொன்ன தலைவர், தங்களுக்கு ஆதரவாக இருப்பாரென யாரும் எதிர்பார்க்க வில்லையாம்.ஆனால் அவரை மைன்ஸ் அதிகாரிக்கு அடைமொழியுடன் பேசுறாங்க.

தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை 52 கோடி ரூபாயை வழங்க கோர்ட்டில் வழக்கு போட்டிருக்காங்க. கோல்டு சிட்டிக்கு, சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் வந்திருந்த போது அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்காதவர்கள், மைன்ஸ் சீப் செக்யூரிட்டி ஆபீசர் காதில் விழும்படி கோஷம் போடுறாங்களாம். பயன் தருமா இந்த போராட்டம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X